நேற்று நடைபெற்ற அதிமுக மாநாடு ஒரு அரசியல் நாடகம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramaniyan

வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற 13 வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், குழந்தை கடத்தல் தொடர்பாக ஐந்து தற்காலிக பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட போது கவன குறைவாக இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4 மாதங்களாக செயல்படாமல் இருந்த ஆர்எப்டி கருவி குறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நேற்று நடைபெற்ற அதிமுக மாநாடு ஒரு அரசியல் நாடகம்; மாநாட்டில் கொள்கைகளைப் பற்றி பேசாமல் வெறும் கலை நிகழ்ச்சிகளே நடந்தது என விமர்சனம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்