தீபாவளி இரவு… கன்னியாகுமரியில் ராஜீவ்காந்தி சிலை உடைப்பு.!
கன்னியாகுமாரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அருமநல்லூர் எனும் கிராமத்தில் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சிலை நிறுவப்பட்டு இருந்தது.
நேற்று தீபாவளி தினத்தன்று நள்ளிரவில், மேற்ககண்ட இடத்தில் இருந்த ராஜீவ் காந்தி சிலையை மர்ம நபர்கள் உடைத்தனர். விடியற்காலை சேதப்படுத்தப்ட்ட சிலையை கண்ட பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சிலை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ராஜீவ் காந்தியின் தலைப்பகுதி துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.