ரூ.60,00,000 லட்சம் செலவில் “யாதும் ஊரே” என்ற தொழில் முனைவோருக்கான இணையதளம் உருவாக்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
இன்று பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விதி 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடியில் 60 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் .
முதலீடுகளை ஈர்க்க ரூ 60 லட்சம் செலவில் “யாதும் ஊரே” என்ற தொழில் முனைவோருக்கான இணையதளம் உருவாக்கப்படும்.கோவையில் ஐ.டி. நிறுவன தேவைக்காக ரூ 200 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்படும்.
ஏற்றுமதிக்காக காஞ்சிபுரம், ஈரோடு சிப்காட்டில் ரூ.50 கோடியில் கட்டமைப்புகள் அமைக்கப்படும். ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.50 கோடியில் குடியிருப்புகள் கட்டப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி.