போலீஸ் என கூறி ரூ.1.40 கோடி வழிப்பறி.! 11 பேரை கைது செய்து பணத்தை மீட்ட காவல்துறை.!
சென்னையில் நகை வியாபாரியிடம் இருந்து 1.40 கோடி ருபாய் வழிப்பறி செய்தவர்களை யானைக்கவுனி போலீசார் கைது செய்துள்ளார்.
கடந்த மாதம் 2ஆம் தேதி யானைக்கவுனி பகுதியில், வெளிமாநிலத்தில் (ஆந்திரா) இருந்து தமிழகத்திற்கு வந்த நகை வியாபாரியிடம் ஒரு கும்பல் காவல்துறை என தங்களை அறிமுகப்படுத்தி அவர்களிடம் சோதனை செய்வது போல ஏமாற்றி 1.40 கோடி ரூபாயை வழிப்பறி செய்து இருந்தனர்.
வழிப்பறி : இந்த சம்பவத்தை அடுத்து பணத்தை பறிகொடுத்த வியாபாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் யானைக்கவுனி பகுதி போலீசார்வ வழிப்பறி செய்த கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
11 பேர் கைது : மேலும் வழிப்பறி கும்பலிடம் இருந்து 75 லட்ச ரூபாயையும், நகைகளையும் யானைக்கவுனி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த 11 பேருக்கு மூளையாக செயல்பட்டவர் இம்ரான் எனும் கொள்ளையன் ஈடுப்பட்டது தெரிய வந்துள்ளது. இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதுவும் தகவல் வெளியாகியுள்ளது.