XE வைரஸ் தமிழ்நாட்டில் இல்லை – சுகாதாரத்துறை செயலாளர்
கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.
இங்கிலாந்தில் முதன்முறையாக ஓமைக்ரான் XE என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவும் தனது முதல் கொரோனா வகை XE நோயை மும்பையில் கண்டறியப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. அதாவது, ஓமைக்ரான் XE என்ற புதிய வகை வைரசால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது. ஆனால், மும்பையில் புதிய வகை XE என்ற கொரோனா கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இருப்பினும், புதிதாக உருமாற்றம் கொண்டிருக்கும் XE-என்ற இந்த வைரஸ் 10 மடங்கு வேகமாக பரவும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது மும்பையில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இதுவரை தமிழ்நாட்டியில் XE போன்ற வைரஸ் தொற்று ஏதும் இல்லை. கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது கட்டாயம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.