டூ வீலரில் சீட் பெல்ட் போடவில்லை அதனால் 100 ரூபாய் அபராதம்!

கோயம்புத்தூரில், இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு சீட் பெல்ட் அணியாத காரணத்தால் கோவை காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
கோயம்புத்தூர் காளப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது, ஹெல்மெட் அணியாத காரணத்தால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
பின்னர், அவரிடம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் போன்றவை சரியாக இருந்தலும் அவர் ஹெல்மெட் போடவில்லை என்பதால் 100 ரூபாய் அபராதம் விதித்தனர். அந்த ரசீதில் தான் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்கு பதிலாக, சீட் பெல்ட் அணியவில்லை என தவறாக எழுதப்பட்டு இருந்தது. அதை அதிகாரிகள் கவனிக்காமல் கையொப்பமிட்டு கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டார். இதனை கண்ட கார்த்திக், அந்த ரசீதை போட்டோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த ரசீது இணையதளவாசிகள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025