தமிழகம் முழுவதும் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது!

Default Image

தமிழகம் முழுவதும் 10,906 இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது.இதில் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர்.

தேர்வுஎழுதுபவர்கள் அன்றைய தினம் காலை 9 மணிமுதல் பகல் 11 மணி வரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் பக.ல் 11 மணிக்கு பின்னர் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், செல்லிடப்பேசி கைக்கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு கருவிகள் தேர்வு எழுதும் அறைக்குள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ, அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலும் அதில் விண்ணப்பதாரரின் புகைப்படத்தை ஒட்டி ஏ அல்லது பி பிரிவு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுத வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, கொரோனா தடுப்பு விதிமுறைகளை கைக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்