பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்…!விஜயகாந்த்
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில்,தருமபுரி சிட்லிங் மலைகிராம பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனத்திற்குரியது. பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். தூக்கு தண்டனை தந்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க முடியும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.