அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு
நாளை மறுநாள் முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வழிபட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை வேகமாக பரவி வருவதால் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க இன்று உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை விரைவில் தமிழக அரசு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் 26ம் தேதி முதல் கொரோனாவுக்கான பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை என்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி கிடையாது.
இதில் குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வழிபட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள், பிரதார்த்தனைகள், சடங்குகளை, வழிபாட்டு தல ஊழியர்கள் மூலம் நடத்திவதற்கு தடையில்லை. இந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.