இனி கவலை வேண்டாம்; வந்தது “மக்களைத் தேடி மேயர் திட்டம்”, பட்ஜெட்டில் அறிவிப்பு.!
“மக்களைத்தேடி மேயர் திட்டம்” சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, இன்று சென்னை மேயர் ப்ரியா தாக்கல் செய்தார். தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில், மேயர் பிரியா தனது பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த பட்ஜெட்டில் மக்களின் குறைகளை நேரடியாக சென்று தீர்க்கும் “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள மக்கள் தங்களின் குறைகளை மேயரிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என்றும் அவை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் மேயர் பிரியா அறிவித்துளளார். மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு, மாதத்திற்கு ஒருமுறை வட்டார அலுவலகத்தில் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.