உலக மகா அரசியல் வித்தகர் ஜெயக்குமார் – ஓபிஎஸ் விமர்சனம்
ஈபிஎஸ் தரப்பு நிலைப்பாடு குறித்து உலக மகா அரசியல் வித்தகர் ஜெயக்குமார் கூறிக்கொண்டே தான் இருக்கிறார்.
நேற்று புதியநீதிக்கட்சி தலைவர் சண்முகத்தை தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவரிடம், இணைவது குறித்து எடப்பாடி பழனிசாமி இடம் பேச வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர் ஏற்கனவே அவர்களது நிலைப்பாடு குறித்து உலக மகா அரசியல் வித்தகர் ஜெயக்குமார் கூறிக்கொண்டே தான் இருக்கிறார்.
இந்த இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ் தான் வாக்கு வாங்குவீர்கள் என ஜெயக்குமார் கூறி வருகிறார் இது குறித்து நீங்கள் கூறுவது என்ன என்று கேள்வி எழுப்புகையில், தேர்தல் காலத்தில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும், இரட்டை இல்லை சின்னதை பொறுத்தவரையில், சின்னத்தை ஒதுக்குவதற்கான உரிமை கட்சியின் விதிப்படி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிப்படி கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் பெற முடியும் என்ற நிலை உள்ளது.
இதற்கிடையில் அவர்களாகவே சில பிரச்சனைகளை எழுப்பி கழகத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். தொண்டர்கள் மத்தியிலும், குழப்பங்களை உண்டு பண்ணிவிட்டார்கள். கட்சி விதிகளுக்கு புறம்பாக தாமாகவே முன்வந்து இடைக்கால செயலாளர் என்று நியமித்துக் கொண்டார் என விமர்சித்துள்ளார். மேலும், அதிமுக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று தான் பிரதமர் மோடி விரும்புகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.