#WorldAIDSDay : எச்.ஐ.வி உள்ளோரை நம்மில் ஒருவராக அன்பால் அரவணைத்து; ஆதரவுக்கரம் நீட்டி வாழ வைப்போம் – மு.க.ஸ்டாலின்

Default Image

தேசிய எச்.ஐ.வி தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். 

இன்று உலகம் முழுவதும் தேசிய எச்.ஐ.வி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

  • தமிழ்நாட்டில் எச்.ஐ.வி. என்கின்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
  • இந்த ஆண்டின் மையக்கருத்து எச்.ஐ.வி / எய்ட்ஸுடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவந்து அத்துடன் எச்.ஐ.வி / எய்ட்ஸ், கொரோனா பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுவோம். ‘End Inequalities. End AIDs, End Pandemics’ என்பதேயாகும்.
  • எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய 25 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓவியப் போட்டியும், இணையதள வினாடி-வினாப் போட்டிகளும் ‘புதிய இந்தியா ‘@75’ என்கிற தலைப்பில் நடத்தப்பட்டு வருகின்றன.
  • ‘எச்.ஐ.வி. உள்ளோரை அன்பால் அரவணைப்போம்; ஆதரவுக் கரம் நீட்டுவோம்’.’ என  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்