‘நீரின்றி அமையாது உலகு’ – உலக நீர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!
உலக நீர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
உலக நாடுகள் இணைந்து , தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தினத்தை கடைப்பிடிக்கின்றனர். அந்த வகையில் இன்று தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘நீரின்றி அமையாது உலகு’ என்கிற அய்யன் திருவள்ளுவரின் நெறிப்படி, இயற்கை வழங்கிய அமுதமாம் நீர்வளத்தைப் பாதுகாத்து – மேம்படுத்தி – தேவைக்கேற்ற அளவில் பயன்படுத்திடுவோம். மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்கிட இந்த அரசு உறுதியேற்றுள்ளது.
நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டி, பயிர்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்திடச் செய்திடுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.