இன்று உலகம் முழுவதும் சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐநா பேரவைக் கூட்டத்தொடரில் வைக்கப்பட்ட 21-ம் நூற்றாண்டின் தீர்மானத்திற்கிணங்க 1993-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22-ஆம் நாளும் உலக நீர்வள நாளாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நாளை கொண்டாடப்பட காரணம் என்னவென்றால், உலகில் நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தவும், உலகில் தற்போது நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர்ப் பற்றாக்குறை பிரச்னையை தீர்ப்பது உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளவும் விழிப்புணர்வுக்காகவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் இந்நாள் குறித்து மக்களிடையே விரிவாகப் பிரசாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதக்குலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. இந்த தினம் கொண்டாடுகிறோம் என்பது கூட இதன் விளைவே. இது, ஒருபுறத்தில் வறட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. எனவே உலகில் இனி யுத்தம் என்று ஒன்று வந்தால் அதற்க்கு காரணம் தண்ணீர் என கூறப்படும் நிலையில் அந்த தண்ணீரை சிக்கணமாக பயன்படுத்த வேண்டும். மழை பொழிய அதிகப்படியான மரங்களை வளர்க்க வேண்டும்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…