கலைஞரின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலக சாதனை படைத்த மாணவர்கள்..!
கலைஞரின் 98 ஆவது பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட ஓவிய போட்டி உலக சாதனை பெற்றுள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களுக்கு 98 ஆவது பிறந்த நாள். இந்த 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளில் ஓவிய போட்டி ஆன்லைன் வழியாக நடைபெற்றுள்ளது. இதில், இந்தியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இருக்கும் 98 மாணவர்கள் தரையில் கலைஞரின் ஓவியத்தை வரைந்தனர்.
கொரோனா காலத்தில் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த ஓவிய போட்டி நடத்தியுள்ளனர். இதில் திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் உட்பட மொத்தம் 98 மாணவர்கள் 98 இடங்களில் 98 நிமிடத்தில் கலைஞரின் ஓவியத்தை தரையில் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த ஓவியத்தை வரைந்த 98 மாணவர்களின் பெயர்களும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் இடம்பெற்று உலக சாதனை படைத்துள்ளது.