உலக அங்கீகாரம் ராம்சார் குறியீடு.. புதியதாக இணைந்த தமிழகத்தின் மூன்று முக்கிய பகுதிகள்…

Default Image

பிச்சாவரம் சதுப்புநில காடுகள், பள்ளிக்கரணை சதுப்புநிலம், கருகிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை இன்று உலக அங்கீகாரமான ராம் சார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளன. 

1971ஆம் ஆண்டு சதுப்பு நிலஙக்ளை காப்பதற்காக உலக அளவில் அதற்கென அங்கீகாரம் கொடுத்து ராம் சார் எனும் குறியீட்டை உருவாக்கி பல்வேறு இடங்களுக்கு அளித்து வருகின்றார்.

அப்படி இதில் இணையும் இடங்கள் ராம் சார் குறியீட்டு இடங்கள் என மதிப்பிடப்பட்டு அதன் வளங்கள் பாதுகாக்க நிதி ஒதுக்கப்படும்.

அப்படி இன்று இந்தியாவில் 5 இடங்களுக்கு ராம்சார் குறியீடு வழங்கப்பட்டது. அதில் மூன்று இடங்கள் தமிழகத்தை சேர்ந்தவர், அதில் ஒன்று, பிச்சாவரம் சதுப்புநில காடுகள், மற்றொன்று பள்ளிக்கரணை சதுப்புநிலம், மூன்றாவது கருகிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை ஆகும் .

இது போக மத்தியப் பிரதேசத்தின் சாக்யா சாகர் மற்றும் மிசோரமில் உள்ள பாலா ஈரநிலம் ஆகிய இடங்களும் ராம் சார் குறியீட்டில் இடம் பெற்றுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்