உலக புகைப்படத்தினம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!
புகைப்பட கலைஞர்களுக்கு மரியாதை தரும் விதமாக, உலக புகைப்படத்தினம் 2023 பலராலும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகை புகைப்பட கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், அவரும் புகைப்பட கலைஞர்களைப் புகைப்படம் எடுத்தார்.
தற்போது, “நிகழ்வுகளை உறைய வைத்தும் – நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்!” என புகைப்பட கலைஞர்களை தான் புகைப்படம் எடுத்த காட்சியை பதிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.