சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது..!

Published by
murugan

2030ஆம் ஆண்டுக்குள் அதிக பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்தொடர்ச்சியாக  இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடக்க உள்ளது. சிங்கப்பூர், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான்,  ஜெர்மனி, டென்மார்க், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்கேற்பாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  வழக்கமாக புதிய முதலீடுகள் எப்போதும் சென்னையைச் சுற்றியே இருக்கும். ஆனால், இந்த உலக முதலீடு மாநாட்டில்  தென்தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கிண்டியில் இந்து நந்தம்பாக்கம் வரையில் 30 மீட்டர் இடைவெளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும், சென்னையை பற்றிய குறிப்பு, சென்னையின் முக்கிய இடங்கள், உணவுகள் தொடர்பான புத்தகம் மற்றும் திருவள்ளுவர், ஜல்லிக்கட்டு, மாமல்லபுரம் கடற்கரை கோயில் இலச்சினை கொண்ட நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது.

Recent Posts

வர்த்தகப் போரை தொடங்கிவிட்ட டிரம்ப்! பதிலடி கொடுக்க உலக நாடுகள் திட்டம்?

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…

26 minutes ago

காயமடைந்த விராட் கோலி எப்படி இருக்கிறார்? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…

58 minutes ago

வக்ஃப் திருத்த மசோதா: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…

2 hours ago

எந்தெந்த பொருட்கள் வரிகளால் பாதிக்கப்படும்? அமெரிக்கா விதித்துள்ள வரிகள் விவரம்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…

2 hours ago

LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!

சென்னை :  கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

3 hours ago

ரொம்ப மகிழ்ச்சியா இங்க தான் இருக்கேன்…நேரலையில் வந்த நித்யானந்தா! வீடியோ இதோ..

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

4 hours ago