உலக குருதி கொடையாளர் தினம்….! மநீம தலைவர் கமலஹாசன் வேண்டுகோள்…!
- உலக குருதி கொடையாளர் தினம்.
- உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம்.
ஒவ்வொரு வருடமும் ஜூன் 14-ம் தேதி உலக குருதிக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் ரத்ததானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை உலக குருதிக் கொடையாளர்கள் தினமாக கொண்டாடி வருகிறது. இந்த தினம் 2005-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள் ட்வீட்டர் பக்கத்தில், ‘உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 14, 2021