உலக எய்ட்ஸ் தினம் – கனிமொழி எம்.பி ட்வீட்
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி ட்வீட்.
இன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் இன்று. எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய்த் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நோய்த் தடுப்பு செயல்பாடுகளை முன்னெடுப்பதோடு, எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவது அவசியம்.
எந்தவித புறக்கணிப்பும், ஒதுக்குதலுமின்றி அவர்களுக்கான உரிமைகள் கிடைத்திட வழிசெய்வோம். எய்ட்ஸ் இல்லாத சமூகம் அமைத்திடுவோம்.’ என பதிவிட்டுளளார்.
எந்தவித புறக்கணிப்பும், ஒதுக்குதலுமின்றி அவர்களுக்கான உரிமைகள் கிடைத்திட வழிசெய்வோம். எய்ட்ஸ் இல்லாத சமூகம் அமைத்திடுவோம். (2/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 1, 2022