மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் இந்த மண்ணில் இல்லை என்றாலும் கூட அவர் செய்த உதவிகள் எல்லாம் அவருடைய எண்ணத்தை நிலைநாட்டியே வைத்து இருக்கும்.

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். அதற்கு பெயர் போனவர் விஜயகாந்த். அவர் உயிரோட இருந்த பொழுதும், தற்போது மறைந்த போதும் கூட, பலருக்கு உணவு அளிக்கும் வள்ளலாக திகழ்கிறார்.

கேப்டன் விஜயகாந்த் மறைந்த நாளில் இருந்து அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் தொடர்ச்சியாக மரியாதை செய்து வருகின்றனர். இதுவரை, பல அரிசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என மரியாதை செலுத்தியுள்ளார்.

தமிழகம் தாண்டி விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். உலகில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் அவர்களது நினைவிடங்களில் உணவு வழங்கப்படுவதில்லை. ஆனால், விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாகப் போற்றப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, விஜயகாந்தின் நினைவிடத்திற்கு “லிங்கன் புக் ஆஃப்” ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதினை பெற்றுக்கொண்ட பிரேமலதா விஜயகாந்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

premalatha - Vijayakanth
premalatha – Vijayakanth [File Image]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்