எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் பணிகள் உள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

மழைநீர் வடிகால் பணிகள் குறைந்தபட்சம் 15 நாள்,அதிகபட்சம் 1 மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மழை அவ்வவ்போது பெய்து வருவதால் வடிகால் பணிகள் தடைபட்டுள்ளது; குறைந்தபட்சம் 15 நாள்,அதிகபட்சம் 1 மாதத்திற்குள் பணிகள் முடிவடையும். எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் பணிகள் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்