போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம் !! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
- ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை
- தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை
- இன்று பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
- இன்றும் தொடரும் போராட்டம்
- பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம்
பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்:
எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.7-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை :
பள்ளி கல்வித்துறை அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு விதி 17B-யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்தது.
அதேபோல் ரூ.7500 ரூபாய் ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை:
இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை.தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 28ஆம் தேதி பணியில் சேரவும் உத்தரவு பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இன்று பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்றுக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளை பணிக்கு திரும்பினால் அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம்.இன்று பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். 28ம் தேதிக்கு பின்னர் பணிக்குவருபவர்கள் அதே பள்ளியில் பணியாற்ற இயலாது . காலியாக இருக்கும் இடத்தில்தான் அவர்கள் பணியில் சேர வேண்டியது இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது.
போராட்டம் தொடரும்:
இந்நிலையில் இன்றும் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்தார்.7-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம்:
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும்.பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் கேட்கும் இடத்தில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தால் அங்கு பணியிடமாற்றம் வழங்கப்படும்.ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பவில்லை என்றால் அவர்களின் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது போராட்டத்தில் ஈடுபட்டு இடை நீக்கம் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களின் பணியிடங்களுக்கு வேறு ஆசிரியர்களை கொண்டு நிரப்ப முடிவு செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.அதன்படி பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு 450 இடங்களில் விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.