புதுச்சேரி முதலமைச்சரோடு இணைந்தே செயல்படுகிறேன் – ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி நிர்வாக பணிகளில், புதுச்சேரி முதலமைச்சரோடு இணைந்தே செயல்படுகிறேன் என ஆளுநர் தமிழிசை பேட்டி.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் என்னை சந்தித்தபோது, நிர்வாகம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதித்தோம்; ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் புதுவை யூனியன் பிரதேசம்தான்.
புதுச்சேரி நிர்வாக பணிகளில், புதுச்சேரி முதலமைச்சரோடு இணைந்தே செயல்படுகிறேன்; புதுச்சேரியில் தொழில்நுட்ப பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட விமான சேவை 10ம் தேதிக்கு பிறகு தொடங்கும்; விமான சேவை இல்லாததால் நானும் பாதிக்கப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.