அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பணி – அரசாணை வெளியீடு!
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Shift Base அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை (1 shift) என்றும், மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை (2 shift) மற்றும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை (3 shift) எனவும் நேரம் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டபடி, Shift Base அடிப்படையில் சுழற்சி பணியாக வழங்கவும். மேலும், பணியில் உள்ள செவிலிய உதவியாளர் தரம்-2 மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனைப் பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களில் (D Group) 50 சதவீதம் பேர் முதல் சுழற்சியிலும், 25 சதவீதம் பேர் இரண்டாம் சுழற்சியிலும் மற்றும் 25 சதவீதம் பேர் மூன்றாம் சுழற்சியிலும் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது.