இன்று தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை..!
போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சு வார்த்தை இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை,கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற் சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கினர். பின்னர் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்ததால் கடந்த மாதம் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழ்நாடு அரசு உத்தரவு
இது தொடர்பான வழக்கில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறை சங்கங்களுக்கு நீதிமன்றம் பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்கள் நலன் கருதி ஜனவரி 19-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக சென்னை நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த 27 தொழிற்சங்கங்கள் மற்றும் 8 போக்குவரத்து மண்டல மேலாண் இயக்குனர்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. பேச்சுவார்த்தை இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறவுள்ளது.