திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டு 2 வயது சிறுவன் சுர்ஜித் 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தற்போது வரை குழந்தையை மீட்கும் பணி 37 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று தொடர்ந்து வருகிறது.
அரசு மேற்கொண்ட பலகட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போல் மற்றொரு குழி தோண்டப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து உள்ளது.
இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வர வைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு அருகில் 3 மீட்டர் தொலைவில் ஒரு மீட்டர் அகலத்தில் 110 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்படும் குழி தோண்டப்பட்ட பிறகு கண்ணதாசன் , திலீப்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய மூன்று தீயணைப்பு வீரர்கள் குழியில் இறங்கி அங்கு இருந்து குழந்தையை மீட்க முடிவு செய்து உள்ளனர்.
ரிக் இயந்திரம் மூலம் 1 மணி நேரத்தில் 110 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்படும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…