நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தென்காசிப் பாண்டிய ராஜா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
அதில், எத்தனை எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்தில் நிதி கேட்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பான் ஜைக்கா நிறுவனத்திடமிருந்து கடன் கோரப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீதமுள்ள 14 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நேரடியாக நிதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ்க்கு மட்டுமே மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கவில்லை.
குஜராத் ராஜ்கோட் எய்ம்ஸ்க்கு கடந்த ஆண்டு டிசம்பர் 31-இல் அடிக்கல் நாட்டிய பின் ஒரு மாதத்தில் நிதி ஒதுக்கி பணி தொடங்கப்பட்டது. ஆனால், மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கடன் ஒப்பந்தமே கையெழுத்தாகாத நிலைஉள்ளது என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
மதுரை தோப்பூரில் ரூ.1764 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்து அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…