கணவர் வாங்கும் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உள்ளது என உயர்நீதிமன்றம் உத்தரவு.
வெளிநாட்டில் வேலை செய்து வாங்கிய சொத்துக்களில் தனது மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவர்சென்னையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.
இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, இல்லத்தரசிகள் பணியை கணவனின் பணியோடு ஒப்பிட முடியாது. இல்லத்தரசிகளின் பணி 24 மணி நேர பணி கணவரது பணி 8 மணிநேரம் மட்டும் தான். குழந்தைகளை கவனிப்பது, குடும்ப நிர்வாகம் என இல்லத்தரசிகள் 24 மணி நேரமும் வேலை பார்க்கின்றனர்.
மனைவி குடும்பத்தை கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது. வருவாய் ஈட்டி கணவர்தன் தன் பங்கை வழங்கினாலும் குடும்பத்தை கவனித்து தனது பங்களிப்பை மனைவி வழங்குகிறார். எனவே கணவர் வாங்கும் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உள்ளது என தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…