இனமான – பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை என முதல்வர் ட்வீட்.
விஜய் டிவி சார்பில், தமிழ்பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பில் பேசுவார். இந்த நிகழ்ச்சி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான – பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் தமிழ்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தொடங்கும்போது, “பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது.
நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்” என வாழ்த்தினேன்.
எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் “இடஒதுக்கீடு எனது உரிமை” என்ற தலைப்பில் உரையாற்றிய திருமிகு தே.நர்மதா அவர்களின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்!’ என பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…