மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாதை – விஜயகாந்த் வரவேற்பு..!
மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாதை திறப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு.
சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்காக பல பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினா கடற்கரையில் மரப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாற்றுத்திறனாளிகள் உடன் கடல் பரப்பு வரை சென்று அவர்கள் கடலில் கால் நினைப்பதை கண்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டுகளிக்க மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட தற்காலிக சிறப்பு பாதையை நிறைந்த பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள். இது புதுமையான திட்டம், அனைவராலும் வரவேற்ககூடிய திட்டம்.’ என பதிவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டுகளிக்க மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட தற்காலிக சிறப்பு பாதையை நிறைந்த பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இது புதுமையான திட்டம், அனைவராலும் வரவேற்ககூடிய திட்டம். pic.twitter.com/5iPVF56Pqp
— Vijayakant (@iVijayakant) December 29, 2021