‘நூறு ரூபாய் கூட வைக்க மாட்டாயா…?’ விரக்தியில் திருடர்கள் செய்த செயல்….!

Published by
லீனா

தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற திருடர்கள் ஒன்றும் கிடைக்காததால், லிப்ஸ்டிக்கை வைத்து சுவற்றில் ‘100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா?’ என்று எழுதிவிட்டு வந்துள்ளனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, தற்கொலை என பல விபரீதமான செயல்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஜோலார்பேட்டையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உறவினர் வீட்டில், சில நாட்களுக்கு முன்பதாக கொள்ளையர்கள் கொள்ளையடித்ததாக செய்திகள் வெளியானது.

துரைமுருகன் உறவினர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற அவர்கள், ஒன்றும் கிடைக்காததால் அங்குள்ள சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றுள்ளனர். மேலும், அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சிசிடிவி பதிவுகளின் மூலம் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, 3 தனிப்படை அமைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது துரைமுருகன் வீட்டின் அருகேயும் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அங்குள்ள தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்று பார்த்த அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காததால், அங்கிருந்த டிவியை உடைத்து விட்டு லிப்ஸ்டிக்கை வைத்து சுவற்றில் ‘100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா?’ என்று எழுதிவிட்டு வந்துள்ளனர். மேலும் அங்குள்ள விலை உயர்ந்த மது பானத்தை அருந்தி விட்டு, ஒரு நோட்டில் ஒரு ரூபாய்கூட இல்ல, எடுக்கல என்று எழுதிவைத்து விட்டு சென்றுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

1 hour ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

2 hours ago

“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…

2 hours ago

சென்னை அவ்வளவுதான்..கோப்பை ஆர்சிபிக்கு தான்..அந்தர் பல்டி அடித்த அம்பதி ராயுடு!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…

2 hours ago

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

3 hours ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

4 hours ago