திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து – முக ஸ்டாலின் அறிவிப்பு

Default Image

திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என முக ஸ்டாலின் அறிவிப்பு.

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த வாக்குறுதியையும் முதலமைச்சர் பழனிசாமி நாளை நிறைவேற்றி விடுவார் என்றும் விமர்சனம் செய்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலுக்கு முடிவு கட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து செய்யப்படும் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu
Andhra woman receives human remains
pushpa 2 ott