மூன்று லட்சம் வரை கடன்களுக்கு வட்டி விகிதத்தை 12 லிருந்து 7 சதவிகிதமாக குறைக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு.
கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை கொள்ளை விளக்க குறிப்பை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக இருக்கும் பெண்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்க்கப்படுவர் என்று அறிவித்தார்.
மகளிர் சுய உதவி குழுக்களில் ரூ.3 லட்சம் வரை கடன்களுக்கு வட்டி விகிதம் 12%ல் இருந்து 3%ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் குறைப்பின் மூலம் 3,63,881 குழுக்களை சேர்ந்த 43,39,780 உறுப்பினர்கள் பயன்பெறுவர் என்றும் குறிப்பிட்டார்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் அளவு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்படும். கணவரை இழந்த பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்கப்படும்.
மேலும், கூட்டுறவுத்துறை தொழில்பயிற்சி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 % வட்டியில் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கூட்டுறவு துறையில் 3939 காலி பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் விரைவில் நிரப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…