இன்று மகளிர் உரிமை தொகை… போனை செக் பண்ணிக்கோங்க..!

Published by
murugan

கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி  காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு புதிதாக 7,35,000 பயனாளிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று காலை தொடங்கி வைக்கும் முதல்வர்.!

இதனால் நவம்பர் மாதம் முதல் 1 கோடியே 13 லட்சத்துக்கும் அதிகமானோர் கலைஞர் உரிமை தொகை பெற்று வந்த  நிலையில் மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு கொடுத்தனர். இந்த மாதம் முதல் மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாதம் முதல் 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக மகளிர் உரிமை தொகையை மாதம் மாதம் 15-ம் தேதியில் வங்கியில் செலுத்தத்தப்பட்டு வருகிறது.  தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கல் முன்னிட்டு இந்த மாதம் ஜனவரி 10-ஆம் தேதி  அதாவது (இன்று) வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று மகளிர் உரிமைத் தொகை பயனாளர்கள் வங்கி கணக்கில் வந்து  சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

12 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல் : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்’ த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

13 hours ago

தமிழ்நாடு மீது இருக்கின்ற வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த பட்ஜெட் – துணை முதல்வர் உதயநிதி காட்டம்

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

14 hours ago

மத்திய பட்ஜெட்டுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…

14 hours ago

‘இட்லி கடை’யில் அருண் விஜய்… மாஸ் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…

14 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல்! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை…நிபுணர்கள் சொன்ன கருத்து!

டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…

15 hours ago