மகளிர் உரிமை தொகை திட்டம் பெண்களை கவர்ந்துள்ளது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.!

Tamilnadu CM MK Stalin

திருவண்ணாமலை பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு, அருணை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 600 படுக்கைகள் கொண்ட புதிய பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார்.

அதன் பிறகு திருவண்ணாமலை மலப்பாம்பாடி கிராமத்தில் வடக்கு மண்டலம் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார்.

600 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

அவர் கூறுகையில், 1967இல் திமுக ஆட்சியமைக்க முதல் அடித்தளமீட்டது. அதற்கு முன் நடைபெற்ற திருவண்ணாமலை இடைத்தேர்தல் தான். அந்த தேர்தல் கொடுத்த வெற்றியில் அடுத்து நாம் (திமுக) ஆட்சியை முதன் முதலாக பிடித்தோம். அந்த இடைத்தேர்தலுக்கு திமுக பொறுப்பாளராக இருந்தவர் தலைவர் கலைஞர் கருணாநிதி.

அதே போல நான் எனது பிரச்சாரத்தை துவங்கியதும் இங்கிருந்து தான். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என நான் தொடங்கிய பிரச்சாரம் என்னையும் முதல்வராக்கி விட்டது. தமிழகத்தில் இதுவரை 4 வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்னும் ஒரே ஒரு வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் சென்னை மண்டலத்தில் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு முன்பிருந்ததை விட, ஆட்சிக்கு வந்த பிறகு இருந்ததை விட, கடந்த 2 மாதங்களில் பெண்கள் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. நமக்கு வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என அனைவருக்கும் நமது திட்டம் பயனளிக்கும். நம்மை எதிர்த்தவர்கள் கூட நம்மை பாராட்டுகிறார்கள். அதற்கு காரணம் மாதம் 1000 ரூபாய் தரும் மகளிர் உரிமை தொகை திட்டம் தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்