பெண் குழந்தைகளின் படிப்பு ஊக்கத்தொகை….பட்ஜெட் குறித்து தமிழிசை புகழாரம்…..!!
பெண் குழந்தைகளின் படிப்பை மேம்படுத்த ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளதை பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை வரவேற்றுள்ளார்
சென்னை தியாகராய நகரில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த தமிழிசை சௌந்தர்ராஜன் பட்ஜெட் வரவேற்கத்தக்கது என்று கூறினார்.மேலும் இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்காக பல திட்டங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது தனி கவனம் செலுத்தியுள்ளனர்என்று பட்ஜெட்டை வரவேற்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் விவசாயத்திற்கு 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது விவசாயத்தையும் கவனத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பெண் குழந்தைகளின் படிப்பை ஊக்கப்படுத்துவதற்காக ஊக்கத்தொகை அறிவித்தது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.