பெண் தொழிலாளர்கள் போராட்டம்- சேலம் வளர்மதி கைது..!
பெண் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் அரசு, காவல்துறை மீது அவதூறு பரப்பியதாக சேலம் வளர்மதி கைது.
காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இதில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில்,ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில்,8 பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனால், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பணிக்காக வந்தவர்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தனியார் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து பொதுமக்களிடையே பீதி உண்டாக்கியதாகவும், அரசு மற்றும் காவல்துறை மீது அவதூறு பரப்பியதாக சேலம் வளர்மதி கைதுசெய்யப்பட்டார்.