வீட்டு வேலை செய்ய விருப்பமில்லாத பெண் இதை செய்யுங்கள்…! நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!
வீட்டு வேலை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்திற்கு முன்பதாகவே மணமகனிடம் அதை தெரிவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு குடும்பநல நீதிமன்றம், ராணுவ அதிகாரி ஒருவரின் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக இராணுவ அதிகாரியின் மனைவி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருந்தபோதே ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி காலமானார். அப்பெண் அந்த மேல்முறையீட்டு மனுவில் தனது கணவர் மது பிரியர் பெண் வெறியர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு வாதத்தில் எதிர்த்தரப்பில் வாதிட்டவர்கள் பொய்யான குற்றங்களை கூறி கணவருக்கு மனவேதனை அளித்ததாகவும், இது சமூகத்தில் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என்றும் தெரிவித்தனர்.
இந்த வலக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் நிதின் ஜாம்தார், ஷர்மிளா தேஷ்முக் ஆகியோர் கொண்ட அமர்வு, கணவர் நடத்தை மீது பொய்யான குற்றச்சாட்டை பெண் கூறுவதாகவும், இந்த செயல் தனது கணவரை கொடுமைப்படுத்துவதற்கு சமம் என்றும் கூறி குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்வதாக கூறியிருந்தனர்.
மேலும் இதனை விசாரித்த நீதிபதி வீட்டு வேலை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்திற்கு முன்பதாகவே மணமகனிடம் அதை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் திருமணம் பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு மனமகனுக்கு ஏதுவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.