கள்ளச்சாராயம் தயாரித்து வீடுகளிலும் ,வயல்வெளிகளிலும் விற்பனை செய்யும் பெண்கள்.!
- திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே பெண்கள் கள்ளச்சாராயம் தயாரித்து வருகின்றனர்.
- மணியார்குப்பம், சின்ன பள்ளிக்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளிலும் ,வயல்வெளிகளிலும் கள்ளச்சாராயம் தயாரிக்கும் பெண்களே விற்பனை செய்து வந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே பெண்கள் கள்ளச்சாராயம் தயாரித்து வருகின்றனர்.அவர்கள் தயாரிக்கும் கள்ளச்சாராயத்தை மணியார்குப்பம், சின்ன பள்ளிக்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளிலும் ,வயல்வெளிகளிலும் கள்ளச்சாராயம் தயாரிக்கும் பெண்களே விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பெண்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடீயோவை யாரோ ஒருவர் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இது குறித்து வாணியம்பாடி மது விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.