ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உண்டு , திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது – மு.க.ஸ்டாலின்

Default Image

பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு சொத்து உரிமையில் சம பங்கு வழங்குவது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்த நிலையில், 2005 இந்து சொத்தூரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், ஆண்பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண்பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் – திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது. உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்