பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2020-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை ஆண்களுக்கு நிகராக 18-லிருந்து 21 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். சமீபத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவை கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர், விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கான நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக பா.ஜ.,வை சேர்ந்த வினய் சஹஸ்ரபுத்தி உள்ளார்.
பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முக்கிய மசோதாவை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழுவில் உள்ள 31 உறுப்பினர்களில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் மட்டுமே பெண் எம்.பி.யாக உள்ளார்.
இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி கூறும்போது, 110 பெண் எம்.பி.கள் உள்ளபோது பெண்களுக்கான திருமண வயதை 21-ஆக உயர்த்தும் மசோதா ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள 31 பேரில் 30 பேர் ஆண்கள்; பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…