பெண்களுக்கே அதிக வாய்ப்பு – ஆண் தேர்வர்கள் புகார்
இட ஒதுக்கீட்டிலும் பெண்கள் அதிகளவில் பலனடைவதால் ஆண்களுக்கான வாய்ப்பு பறிபோவதாக புகார்.
தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் தொடங்கி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் tnpscgroup2 தேர்வுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உளப்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் குருப் 2 தேர்வு எழுதினர். Group 2 / 2A தேர்வுக்கு இந்த முறை ஆண்களை விட பெண்கள் அதிகபட்சமாக விண்ணப்பித்திருந்தனர்.
அதாவது ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்விலும், TNPSC நடத்தும் இதர தேர்வுகளிலும் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலும் பெண்கள் அதிகளவில் பலனடைவதால் ஆண்களுக்கான வாய்ப்பு பறிபோவதாக ஆண் தேர்வர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.