பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படும் : கமலஹாசன்
- பெண்களுக்கு விவசாயம் உள்பட அனைத்து துறையிலும் ஆண்களுக்கு நிகரான ஊதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
- தாங்கள் வெல்லும் தொகுதியில் அனைத்தையும் பசுமையானதாக மாற்றுவோம் எனவும் கமலஹாசன் உறுதியளித்துள்ளார்.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகமெங்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. மக்கள் நிதி மய்யம் கட்சியின் கமலஹாசன் அவர்கள் கூறுகையில், தாங்கள் வெற்றிபெறும் தொகுதிகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை அகற்றப்படும் என்றும், பெண்களுக்கு விவசாயம் உள்பட அனைத்து துறையிலும் ஆண்களுக்கு நிகரான ஊதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் பரவி உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களை பாதுகாப்போம் எனவும், சென்னை நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக மாற்றப்படும் எனவும், தாங்கள் வெல்லும் தொகுதியில் அனைத்தையும் பசுமையானதாக மாற்றுவோம் எனவும் கமலஹாசன் உறுதியளித்துள்ளார்.