பிரசவத்திற்கு பின் வயிறு வீங்கிய பெண்.பின்னர் உயிரிழந்த சம்பவம்.பரிசோதனையில் வயிற்றின் உள்ளே பஞ்சு மற்றும் துணி இருந்த அதிர்ச்சி சம்பவம்.
பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள்.
தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் ஆவார்.இவரது மனைவி பிரியா ஆவார்.இவர் பிரசவத்திற்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிரசவத்திற்கு பின்னர் தாயும் குழந்தையும் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்துவந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 31-ம் தேதி பிரியாவின் வயிறு திடீரென வீங்க தொடங்கியுள்ளது.
மேலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக மாறதொடங்கியுள்ளது இதன் காரணமாக பிரியா மேல் சிகிச்சை பெற புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்த பின்பும் பலனின்றி கடந்த புதன் கிழமை பிரியா உயிரிழந்துள்ளார்.அப்போது அவரின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றின் உள்ளே பஞ்சு மற்றும் துணி இருப்பதாக கூறியுள்ளார்.
இதன் காரணமாக பிரியாவின் உறவினர்கள் விருத்தாசலம் மருத்துவமனையின் முன்பு நேற்று திரண்டுள்ளனர்.பிரியா உயிரிழந்ததற்கு காரணம் மருத்துவர்களே ஏனெனில் அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் பஞ்சு ,பழைய துணியை வைத்து தைத்துள்ளனர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியரின் அலச்சியத்தால் மட்டுமே பிரியா உயிரிழந்துள்ளார் என்று கூறியதோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இச்சம்பவம் காரணமாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக போராட்டக்காரர்கள் களைந்து சென்றுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…