நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் சுமார் 30 மணி நேரம் இருந்த பெண்ணின் உயிரை கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.
கிருஷ்ணகிரி சேர்ந்தவர் மல்லிகா இவரை கடந்த மே 25-ம் தேதி ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக 26ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார் அங்கு இதய அறுவை சிகிச்சையின் அவசர நெஞ்சு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இதய அறுவை சிகிச்சைத்துறை கொண்ட குழு பத்திரமாக அறுவை சிகிச்சை செய்து சுமார் 30 மணி நேரம் நெஞ்சு பகுதியில் குத்தியிருந்த கத்தியை பாதுகாப்பாக அகற்றினர். இது குறித்து மருத்துவமனையில் சொல்லும்போது இது ஒரு ஆச்சரியமான அதிர்ச்சியான நிகழ்வு. அந்த கத்தி பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் இறங்கி இருந்தது.
ஒரு இன்ச் கைப்பிடி மட்டுமே வெளியே தெரிந்த நிலையில் சிகிச்சை செய்ததில் கத்தி இறங்கியா பகுதியில் முக்கிய உறுப்புகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால் நுரையீரலில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டது ஆனால் மற்ற உறுப்புகளுக்கு பாதிக்காத வகையில் அறுவை சிகிச்சை செய்து கத்தி பாதுகாப்பாக அகற்றிய பின்பு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பும் சரிசெய்யப்பட்டது என்று மருத்துவர் கூறியுள்ளார்.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…