பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை…!!
திருச்சியில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் அடுத்துள்ள தவளைக்குப்பத்தைச் சேர்ந்த செல்லப்பன் மகள் செந்தமிழ்செல்வி. திருச்சி கே.கே நகர் மத்திய சிறை காவலர்கள் குடியிருப்பில் தங்கி, பெண்கள் சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது அறை உள்ளிருந்து பூட்டப்பட்டு, நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த சக காவலர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, செந்தமிழ்ச் செல்வி தூக்கில் தொங்கி உயிரிழந்தது தெரியவந்தது. இவரது தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.