பெற்றோர்களுக்கான நிலத்தகராறால் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மகன்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை பூஞ்சோலை என்ற பகுதியை சேர்ந்த ஜோசப் அன்னமேரி என்பவரின் மகள்தான் பிரியா, இவருக்கு 26 வயதாகிறது. ஹோம் நர்சிங் துறையில் பணியாற்றி வந்த இவர், ஊரடங்கால் தற்பொழுது வீட்டில் இருக்கிறார். ஏற்கனவே இவர் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் குடும்பத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த செங்கோடன் மல்லிகா என்பவர் குடும்பத்திற்கும் நில சம்பந்தமான பிரச்சனை நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளது. இதனால் செங்கோடன் மல்லிகாவின் 28 வயது சின்னண்ணன் எனும் இளைய மகன் பிரியாவுக்கு இந்த பிரச்சனையை காரணம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
காட்டு பகுதியில் வசித்து வரக்கூடிய ப்ரியாவின் வீட்டில் கழிவறை இல்லாததால் அவர் வெளியில் செல்லும்பொழுது சின்ன கண்ணன் செல்போனில் படம் எடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரியா யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த போது சின்னகண்ணன் அவர்கள் வீட்டிற்கு சென்று பிரியாவுக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார், இதனால் அவரது கை மற்றும் கன்னத்தில் காயம் ஏற்பட்டதாகவும் அவரை மீட்ட உறவினர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், செங்கோடன் குடும்பம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருச்சி டி.ஐ.ஜி ஆனியிடம் பிரியா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…