சென்னையில் உள்ள அம்பத்தூர் அத்திபட்டி கலைவாணர் பகுதியில் வசித்து வருபவர் லாரன்ஸ்.இவர் அம்பத்தூரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.
இவருக்கும் அயப்பாக்கம் குடியிருப்பை சேர்ந்த சட்ட கல்லூரி 2-ம் வருடம் பயிலும் மாணவி சத்ய பிரியா என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு தற்போது அது காதலாக மாறியுள்ளது.
இதனை தொடர்ந்து சத்யபிரியா கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியே வந்து லாரன்ஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.அவரிடம் விசாரித்த லாரன்ஷின் பெற்றோர் 3 மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்.
இதன் காரணமாக ஆவடியில் உள்ள சரஸ்வதி நகர் சம்பங்கி தெரிவில் இருவரும் ஒரு தனி வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.பின்னர் 3 மாதம் முடிந்த பிறகு சத்யபிரியா தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு லாரன்ஸ் பெற்றோரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் உங்கள் வீட்டில் இருந்து வரதட்ச்சனை வாங்கி வந்தால் தான் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார்.இதனால் மனம் உடைந்த சத்யபிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் லாரன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரன்ஸ் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.பின்பு வழக்கம் போல கடைக்கு சென்று வியாபாரத்தை கவனித்து கொடிருந்துள்ளார்.அப்போது அங்கு வந்த சத்யபிரியா அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக லாரன்ஸ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் .இதற்கிடையே சத்யபிரியா நடந்த நிகழ்வுகளை தமது தந்தை சக்திவேலிடம் கூறியுள்ளார்.உடனே சக்திவேல் தனது நண்பர் குமாருடன் இணைந்து லாரன்ஸின் கடைக்கு வந்து தகராறு செய்துள்ளார்.
பின்னர் ஆத்திரம் அடைந்த சக்திவேல் லாரன்ஸை வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.பின்னர் அக்கம்பக்கத்தினர் லாரன்ஸை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தற்போது லாரன்ஸ் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை செய்து வருகின்றன.மேலும் தப்பி சென்ற குமாரையும் சத்யபிரியாவையும் தேடி வருகின்றன.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…