நித்திக்கு போட்டியாக களமிறங்கிய பெண் சாமியார் கைது..!!
- வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கபிலா பாம்பை அவரது கழுத்தில் சுத்தி தொங்கவிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
- கோவிலின் விளம்பரத்திற்காக நாக பூஜை செய்ததை பெண் சாமியார் ஒப்புக்கொண்ட பின்னர் பொலிஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கபிலா சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வட பத்ரகாளி அம்மனுக்கு கோவிலை கட்டியுள்ளார். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திய போது நல்ல பாம்புகளை வைத்து சர்ப்ப சாந்தி என்னும் பெயரில் நாக பூஜை நடத்தியுள்ளார். மேலும் அந்த நல்ல பாம்பை அவரது கழுத்தில் சுத்தி தொங்கவிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பாம்புகளை வைத்து பக்தர்களிடம் பணம் கறப்பதாக பெண் சாமியார் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இணையதளத்தில் இவரது வீடியோ வைரலாகியதை அடுத்து சென்னை வனகாவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனதுறை அதிகாரிகள் பெண் சாமியார் கபிலாவிடம் நாக பூஜை குறித்து தீவிர விசாரணை நடைபெற்றன.
இந்நிலையில் விசாரணையில் கோவிலின் விளம்பரத்திற்காக நாக பூஜை செய்தேன் என்று பெண் சாமியார் ஒத்துக்கொண்டார்.அதன் பின்னர் கபிலாவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து 3 ஆண்டுகள் சிறையில் அடைத்துள்ளனர்.